Sunday 3 February 2019

22 Vows Administered By Dr. Babasaheb Ambedkar After Reversion To Buddhism [ Tamil Translation And English].

புரட்சியாளர் அம்பேத்கர் எடுத்துக்கொண்ட 22 உறுதிமொழிகள்.

புரட்சியாளர் டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்கள் பூர்வ மதமான பௌதம் திரும்பியபின் எடுத்துக்கொண்ட 22 உறுதிமொழிகள்: (நாக்பூரில் அக்டோபர் 14, 1956)

1) நான் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியவைகளை கடவுளாக மதிக்க மாட்டேன். அவர்களை வணங்க மாட்டேன்.
2) இராமனையோ, கிரிஷ்ணனையோ கடவுளாக நான் மதிக்க மாட்டேன். அது மட்டுமல்ல அவர்களை நான் கும்பிட மாட்டேன். வணங்க மாட்டேன்.
3) இந்து மதத்தில் உள்ள கடவுள்களான கவுரி அல்லது கணபதி அல்லது இந்து மதத்தில் சொல்லபடுகின்ற எந்த கடவுளையும் வணங்க மாட்டேன். ஏற்க்க மாட்டேன்.
4) கடவுள் என்பவர் அவதாரம் எடுத்தார் என்ற கருத்தை நான் ஒரு போதும் ஏற்க்க மாட்டேன்.
5) புத்தர் என்பவர் மாகாவிஷ்ணுவினுடைய அவதாரம் என்பதை ஒரு போதும் அந்த பிரசாரத்தை நான் ஒப்பு கொள்ள மாட்டேன்.
6) சிரார்த்தம் கொடுப்பதும் பிண்டம் போடுவது, இந்த மாதிரி சடங்குகளை ஒரு போதும் இனி நான் செய்ய மாட்டேன்.
7) புத்த நெறியில் தம்மதிர்க்கு எதிரான எந்த செயலிலும் ஈடுபடமாட்டேன்.
8) பிராமணர்களால் செய்யும் எந்த சடங்கிலும் நான் என்னை ஈடுபடுத்தி கொள்ள மாட்டேன்.
9) எல்லா மனிதர்களையும் சமதுவகமாககருதுவேன்.
10) நான் சமத்துவத்திற்காக தான் பாடுபடுகிறேன்.
11) புத்தர் சொன்ன எட்டு வழிகலான நேர்மை, நியாயம், ஒழுக்கம் போன்ற அந்த எட்டு வழிகளையும் நான் கடை பிடிப்பேன்.
12) புத்தர் சொன்ன 10 உறுதிமொழிகளை நான் ஏற்பேன்.
13) நான் எல்லா மனிதர்களுக்கும் கருணை காட்டுவதும், அவர்களை அலட்சிய படுத்தாமல் அவர்களை பற்றிய சிந்தனைக்கு ஆளாவேன்.
14) நான் திருட மாட்டேன்.
15) நான் பொய் சொல்ல மாட்டேன்.
16) நான் எந்தவிதமான தீய போதிக்கும் அடிமை ஆக மாட்டேன்.
17) நான் மதுவை குடிக்க மாட்டேன்.
18) புத்த நெறியின் தம்மம் என்கிற அறவழியில் உள்ள மூன்று கொள்கைகள் ஆன தியானம், சீலம்,கருணை என்னும் அடித்தளங்கள் மீதே என் வாழ்கையை அமைத்து நடப்பேன்.
19) மனித இனத்தின் முன்னேற்றத்தை தடுத்தும்,அந்த மனித பிறவிகளை இழிவானவர்களாக சம உரிமை அற்றவர்களாக எண்ணி ஒடுக்கியதும் இந்து மதமே. எனவே அத்தகைய இந்து மதத்தை நான் துறக்கிறேன்.
20) இதுதான் உண்மையான தம்மம் என்கிற அறவழி என்பதாக புரிந்து கொள்கிறேன்.
21) ஒரு புதிய பிறவியை (இப்பொழுதான் ) எடுத்திருப்பதாக நான் எண்ணுகிறேன்.
22) இந்த நேரம் முதல் இனிமேல் புத்தருடைய போதனைகள் வழியே நடந்து கொள்வேன் என்னும் சூளுரையை எடுத்து கொள்கிறேன்.


  22 Vows administered by Dr. Babasaheb Ambedkar 



22 Vows administered by Revolutionary Dr. Babasaheb Ambedkar after Reversion (Not a conversion) to Buddhism on 14th October 1956 at Nagpur.

1) I shall not consider Brahma, Vishnu and Mahesh as God nor shall I worship them.
2) I shall not consider Ram and Krishna as God nor shall I worship them.
3) I shall not believe in Gouri-Ganesh and other Gods and goddesses of Hindu Religion nor shall I worship them.
4) I don’t have faith incarnation of God.
5) I believe that, Buddha is incarnation of Vishnu, is a false and malicious propaganda.
6) I shall not perform shraddha, nor shall I give Pind-dan.
7) I shall not practice anything which is against and different from Buddha’s Dhamma.
8) I will not perform any rituals to be performed by Brahmins.
9) I believe that all human beings are equal.
10) I shall make efforts to establish equality.
11) I shall follow the Eight fold path as told by the Buddha.
12) I shall practice ten Paramitas as told by the Buddha.
13) I shall have compassion and living kindness for all living beings and protect them.
14) I shall not steal.
15) I shall not tell lies.
16) I shall not commit any sexual misconduct.
17) I shall not consume liquor/intoxicants.
18) I shall lead a life based on Buddhist Principle of wisdom, Precepts, and compassion.
19) I denounce Hindu religion which is Harmful for my development as a human being and which has treated human being unequal lowly and I accept Buddha’s Dhamma.
20) I am convinced that Buddha’s Dhamma is Saddhamma.
21) I believe that I am taking new birth.
22) I commit that henceforth I shall act as per Buddha’s principles and teachings.


புரட்சியாளர் அம்பேத்கர் எடுத்துக்கொண்ட 22 உறுதிமொழிகள்.

Jai bheem...!!!

No comments:

Post a Comment